அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 150-கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது.

பிராட் ஸ்பாபோர்ட் என்பவருக்கு சொந்தமான அந்த வீட்டில் இருந்து அதிகளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வரலாற்றில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமாக வெடுகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் உணவோடு உணவாக மிகவும் அபாயகரமான HMTD வெடிப்பொருட்களை ‘தொடாதீர்கள்’ என்ற லேபலிட்டு வைத்திருந்ததாகவும் அது தவிர பயணப் பைகளில் குழாய் குண்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களைக் கைப்படத் தயாரிக்கும் செய்முறைகள் அடங்கிய புத்தகமும் கைப்பற்றப்பட்டது.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் படத்தை மாட்டி வைத்து அதனைக் குறி பார்த்து துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமாக வெடுகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.