சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் அலுவலகங்களுளில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் 1000-க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
மத்திய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள 2500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவரின் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை ஆய்வு செய்ததில், அதில், 1,000-க்கும் மேலான சான்றிதழ்கள் போலி என தெரிய வந்துள்ளதாக தேர்வுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
இந்த போலி சான்றிதழ் வடமாநிலங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் அடைந்துள்ளதாகவும், உ.பி. மாநிலம் தியோரியாவில் உள்ள தபால் அலுவலகங்களில் சேர 500 பேர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போன்ற போலியான தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், அதனால், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் உ.பி.யில் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் என்று தமிழக அரசின் தேர்வுகள் துறை சந்தேகப்படுவதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து தமிழக அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.