திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள், மாணவிகள் தொடர்ந்து காணாமல் போகின்றனர். இது அம்மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், பீதியையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி உள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 பேர் காணாமல் போனதாக புகார் பதிய செய்யப்பட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‘

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் திடீரென காணாமல் போனதாக புகார் கூறப்பட்டு வருகிறது. அவர்கள் குறித்து எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேர் காணாமல் போன நிலையில், நேற்று மேலும் 4 மாணவிகள் மாயமாகி உள்ளனர். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த ஒரு ஆண்டுக்குள் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சாருலதா, சின்னகடம்பூர், மோட்டூரைச் சேர்ந்த தேவி, சுபாஷினி (18), சரண்யா (22) ஆகிய 4 பேர் மாயமாகி உள்ளதாக புகார் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற இளம்பெண், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்றும், வெள்ளவேடு எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்ற 16 வயது இளம்பெண், புல்லரம்பாக்கம் கலைவாணி, ஊத்துக்கோட்டை  வர்ஷா  உள்பட  4 இளம்பெண்களை காணவில்லை என்றும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண்கள் மாயமாகி வருவது அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இளம்பெண்கள் காதல் வயப்பட்டு செல்கின்றனரா அல்லது மர்ம கும்பலால் கடத்தப்படுகின்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.