
அம்ரோகா, உத்திரப் பிரதேசம்
உத்திரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் தபஸ்ரீ கிராமத்தில் சென்ற வார்ம் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது அம்ரோகா மாவட்டம்.. இந்த மாவட்டத்தில் உள்ள சிற்றூர் தபஸ்ரீ. இந்த கிராமத்தில் குரங்குகள் அதிகம் உள்ளன.
கடந்த வாரம் திடீரென 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இங்கு மரணம் அடைந்துள்ளன. ஒரே வாரத்தில் இத்தனை குரங்குகள் மரணம் அடைந்தது பரப்பரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கிராம மக்கள் குரங்குகள் ஒருவகை உணவுப் பொருளை உட்கொண்டபின் மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். அதனால் இந்தக் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் காவல்துறையினர் இடையே எழுந்துள்ளது.
வனத்துறையினர் இறந்த குரங்குகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர். பரிசோதனைக்குப் பின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]