ஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இதுவரையிலான போட்டிகள் அடிப்படையில், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் வரிசையில் பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 7 போட்டிகள் ஆடி 37 பவுண்டரிகளை அடித்துள்ளார். அதே அணியின் மயங்க் அகர்வால் 7 போட்டிகளில் ஆடி 34 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
மூன்றாவது வீரராக உள்ள மும்பையின் சூர்யகுமார் 7 போட்டிகளில் ஆடி 33 பவுண்டரிகளை அடித்துள்ளார். சென்னை அணியின் டூ பிளசிஸ் 8 போட்டிகளில் ஆடி 29 பவுண்டரிகளை அடித்து 4வது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல்லும், டெல்லி அணியின் ஷிகர் தவானும் தலா 25 பவுண்டரிகளுடன் உள்ளனர்.

[youtube-feed feed=1]