சென்னை: பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், பொதுமக்களுடன் பள்ளி மாணாக்கர்களும் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் விபத்துக்ளும் ஏற்படுகின்றன. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் பள்ளி மாணவன் ஒருவன், பேருந்து படியில் இருந்து விழுந்தது தொடர்பான வீடியோ வைலானது.
இதையடுத்து, பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்குமாறு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் 21,000 பேருந்துகள் இருக்கிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்து தேவை என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது; புதிகதாக பேருந்து ஓட்டுநர்கள், நடத்ததுநர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.