டாக்கா,

ங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று காலை வங்கதேசத்தை தாக்கியது. 117 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டத்துக்கு மோரா என பெயரிடப்பட்டது. இந்த புயல்  வங்கக் கடலில் 720 கிலோ மீட்டர் தொலைவில் கொல்கத்தாவின் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளதாக, கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த புயல் வலுவடைந்து வங்கதேசம் அருகே இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மோரா புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஏற்கனவே கடற்கரை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பு இடங்களில் தங்க வைத்துள்ளது வங்கதேச அரசு

இந்நிலையில் இன்று காலை மோரா புயல் வங்கதேசத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. சுமார் 117 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்ததாக தகவல்கள் வந்துள்ளன.

கடல் கொந்தளிப்பாக இருந்ததாவும், சேத விவரங்கள் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தில் கனமழை பொழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக வங்கதேசம், வடகிழக்கு மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்படும் என தெரிகிறது.