அனிதா, சனம் இருவரும் கிச்சன் டீமில் இருந்தனர். இதில் சனம் சமைத்து கொண்டிருக்க, அனிதா பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது என்று சண்டையை ஆரம்பித்தார் .

தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் புதிய டாஸ்காக ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற விளையாட்டை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த டாஸ்கில் பாட்டியாக வரும் அர்ச்சனாவை திருப்தி செய்பவர்களுக்கு சொத்து பத்திரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ப்ரோமோவில் வீட்டில் அர்ச்சனா வைத்துள்ள உயில் பத்திரத்தை திருட ரம்யா பாண்டியன் திருடராக தேர்வு செய்யப்படுகிறார். மேலும் அவருடன் சோம் மற்றும் கேப்ரியல்லாவும் இணைந்து கொண்டு, மற்றவர்களுக்கு தெரியாமல் பத்திரத்தை திருட திட்டமிடுகின்றனர்.

 

[youtube-feed feed=1]