
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்து தீபாவளி விருந்தாய் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர் துவங்கி, ப்ரோமோஷன் பணிகள் வரை கச்சிதம் காண்பித்திருந்தனர் படக்குழுவினர். படத்தின் ஆடி குத்து, பகவதி பாபா, சாமி குலசாமி, அயிகிரி நந்தினி போன்ற பாடல்களின் வீடியோ வெளியானது. இதனைத்தொடர்ந்து தற்போது பார்த்தேனே பாடல் வீடியோ வெளியானது. ஜெய்ராம் பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.
[youtube-feed feed=1]