டில்லி:

25ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில், நடப்பாண்டில் அதிக மழைக்காலத்தை இந்தியா பதிவு செய்துள்ளது என்றும், இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை இன்னும் தீவிரமாக உள்ளது மற்றும் தென்மேற்கு பருவமழை  முடிவடைந்ததும், அக்டோபர் 10 ஆம் தேதி வடமேற்கு பகுதிகளில் இருந்து தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பீகார், மகாஷ்டிரா, குஜராத், கேரளா உள்பட பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான உயரிழப்புகள் மட்டுமின்றி பெரும் சேதங்களும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு பெய்த பருவ மழையில் அளவு குறித்து ஐ.எம்.டி. எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

அதில், கடந்த ஜூன் மாரதம் சராசரியை விட 33 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்ததாகவும், து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே சராசரியை விட 15 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 1994-ம் ஆண்டு இதுபோல் பருவமழை பெய்ததாக தெரிவித்துள்ள வானிலை மையம், 25 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு , நடப்பாண்டில் அதிக மழைக்காலத்தை இந்தியா பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை இன்னும் தீவிரமாக உள்ளது மற்றும் தென்மேற்கு பருவமழை  முடிவடைந்ததும், அக்டோபர் 10ம் தேதி வடமேற்கு பகுதிகளில் இருந்து தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது.