டில்லி
புதிய நாடாளுமன்றத்தில் இந்த வருட மழைக்கால கூட்டத் தொடர் ந்டைபெற உள்ளது.
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை பிரதம்ர் மோடி திறந்து வைத்தார், இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக கூறப்பட்டு வந்தது.
இன்று மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.