நெல்லை: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியான நிலையில் தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவருக்கு, குரங்கம்மை (Monkey Pox) தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள ம் மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவெ இந்தியாவில் கண்டறிய நபருக்கு Clade 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், கேரளாவிலும் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவின் மலப்புழா மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குரங்கம்மை தொற்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மாநில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/
ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் ஸ்கிரினிங் மற்றும் தெர்மல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே குரங்கம்மை நோயுக்கு சிசிச்சைஅளிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையெ, மத்தியஅரசின் உத்தரவின்பேரில், மாநிலங்களில், தேவையான மருந்துகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்து, தனிமைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தி உள்ளது.
அத்துடன் மாநில எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள எல்லையான செங்கோட்டை, திருவனந்தபுரம், பாலக்காடு, கோவை, பொள்ளாச்சி போன்ற எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் டு உள்ளது.
காங்கோ குடியரசு நாட்டில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை, பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.