லண்டன்:
குரங்கு அம்மை பரவலை உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவிக்கையில், உலகில், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது.இதனால் குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.