புதுச்சேரி:
புதுச்சேரியில் நாடாளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்வாக்குப்பதிவும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மாநில கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்பட அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக உரிமையை நிலை நாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின்படி தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, என்ஆர்காங்கிரஸ்-பாஜக பிரமுகர்கள் தேர்தல் அதிகாரிகளலால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.