நெல்லை:

மிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், நெல்லையில் திமுக வேட்பாளருடன் வந்த மற்றொரு காரில் இருந்து ஏராளமான பணம் பறிமுதகல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்பட பல கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன.  அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும்  வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்தல் களத்தில் தீவிர பணியாற்றத் தொடங்கி விட்டனர். அதுபோல தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளிலும், வாகன சோதனை களிலும் தீவிரம் காட்டி வருக்ன்றனர்.

இந்த நிலையில், நெல்லை மக்களவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள  திமுக வேட்பாளர் ஞானதிரவியம்  வாக்கு கேட்டு ஊர்வலமாக சென்றார். அவர்களை மடக்கிய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  அவருடன் வந்த மற்றொரு காரில் ஏராளமான பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வாகன சோதனை  பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்றதாகவும்,அப்போது, திரவியம் உடன் வந்த திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக  தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.