ஏழைப்பெண்ணின் வங்கி கணக்கில் தண்ணீராய் கொட்டும் பணம்..

Must read

ஏழைப்பெண்ணின் வங்கி கணக்கில் தண்ணீராய் கொட்டும் பணம்..

உத்தரபிரதேச மாநிலம் கிம்மத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதாதேவி என்ற 50 வயது பெண் ஆக்ரா அருகே உள்ள சாம்புநகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். பிழைப்புக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பே, அவர்கள் சாம்புநகருக்கு வந்து விட்டனர். குடும்பமே கூலிவேலை செய்து பிழைத்து வந்தது.
அவர்கள் வசித்து வரும் குடிசை பகுதியில் அண்மையில் ஒரு செய்தி பரவியது. ‘பிரதமரின் ’ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், ஊரடங்கு நிவாரண நிதியாக, ஏழைகளுக்கு அவர்கள் வங்கி கணக்கில் 500 ரூபாய் போடப்பட்டுள்ளது’’ என்பதே அந்த செய்தி.
ராதாதேவிக்கு உள்ளூரில் வங்கி கணக்கு இல்லை. ஆனால் சொந்த ஊரில் உள்ளது. ராதாவுக்கு கூன் விழுந்த முதுகு. சரியாக நடக்க முடியாது. ஆனாலும் 500 ரூபாயை எடுக்க, 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள வங்கிக்கு நடந்தே போனார். வெயிலின் தாக்கத்தால் வியர்வையில் குளித்து வங்கிக்கு சென்ற ராதாவுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.
அவருக்கு வங்கி கணக்கு காலாவதியாகாமல் இருந்தது. ஆனால் அதில் 207 ரூபாய் மட்டுமே பணம் இருந்தது. 500 ரூபாய் எங்கே? ‘’உங்கள் வங்கி கணக்கு ’ஜன்தன்’ திட்டத்தோடு இணைக்கப்படவில்லை.எனவே பணம் வரவில்லை’’ என வங்கி அதிகாரிகள் சொல்ல- விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார், ராதாதேவி.
மறுபடியும் 30 கி.மீ. தூரம் நடந்து வியர்வையில் குளித்து, வீடு போய் சேர்ந்தார். ராதாதேவியுடன், அதிர்ஷ்டதேவதையும் வழி நெடுக நடந்தே சென்றுள்ளது. ஆமாம். ராதாதேவியின் ’‘நடைப்பயணம்’’ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
அவரது வங்கி கணக்கில் இரக்க மனம் படைத்தோர், பணம் செலுத்தியுள்ளனர். இன்றைய தினம், ராதாதேவின் வங்கி கணக்கில் சேர்ந்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 26 ஆயிரம் ரூபாய். 500 ரூபாய்க்கு நடந்தார். 26 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
ராதாதேவியின் வங்கி கணக்கில் பணம் இன்னும் கொட்டி வருகிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.

More articles

Latest article