நெட்ப்ளிக்ஸில் 2017-ம் ஆண்டு வெளியான மனிஹெய்ஸ்ட் இணைய தொடர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைப் பற்றிய கதைதான் மனிஹெய்ட் தொடர். இதுவரையில், நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது.
மனிஹெய்ஸ்ட்டின் 5-வது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. முந்தைய சீசன்களில் ஒரு சீசனுக்கு 8 பகுதி இருந்தநிலையில், இறுதி சீசனான 5-வது சீசனில் 10 பகுதிகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.