சென்னை

பணியாளர்களின் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.

டாஸ்மாக் கடைகள் என்பது தமிழக அரசின் மது விற்பனைக் கடைகள் ஆகும். தமிழகத்தில் மொத்த 3000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையாகும் பணம் இந்தக் கடை ஊழியர்களால் தினமும் வங்கியில்  செலுத்தப்படுகிறது. வங்கியில் பணம் செலுத்தச் செல்லும் ஊழியர்களைத் தாக்கி கொள்ளை அடிப்பது மற்றும் கடைகளில் புகுந்து இரவு நேரத்தில் கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

பணியாளர்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே  பணியாளர்களின் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 200 கிலோ எடையுள்ள இந்த இயந்திரத்தில் ஊழியர்கள் பணத்தைச் செலுத்த வேண்டும். இந்த இயந்திரத்தை எளிதில் உடைக்க முடியது. அத்துடன் இந்த இயந்திரத்தில் பணம் செலுத்த மட்டுமே முடியும். எடுக்க முடியாது.

இதனால் இந்த இயந்திரத்தை உடைத்து  கொள்ளையர்களால் பணத்தைத் திருட முடியாஹ்டு. டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொள்ளையர்களால் ஆபத்து ஏற்படுவதை நிறுத்த இந்த இயந்திரம் சோதனை முறையில் சில கடைகளில் பொருத்தப்பட உள்ளது. இந்தச் சோதனையின் முடிவுக்குப் பிறகு ஆலோசனை நடத்தி இந்த இயந்திரத்தை அனைத்து கடைகளிலும் நிறுவுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் எனத் தெரிய வந்துள்ளது.