சில நேரங்களீல் நிஜ வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் திரைப்படங்களை விட சுவாரஸ்யம் நிறைந்தவையாக இருக்கும்.
ஒரு விந்து வங்கியை , திருமணத்தகவல் நிலையம் போன்று பயன்படுத்துவதை முன்னாள் மெல்போர்ன் விளம்பர நிர்வாகி அமினா ஹார்ட் பரிந்துரைக்க வில்லை. எனினும் கிட்டத்தட்ட அவர் அவ்வாறு தான் பயன்படுத்தினார் எனலாம்.
எப்பொழுதும், ஒருவரைச் சந்தித்து, காதலித்து, திருமணம் செய்த பின் தான் அவர் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தக் அமினா ஹார்ட் விசயத்தில் எல்லாமே தலைகீழாக நடைப்பெற்றது எனலாம்.
இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் நாவலிலும் விரைவில் திரைபடமாகவும் வரவுள்ளது. அப்படி என்ன நடந்த்து இவர் வாழ்வில் ? தொடர்ந்து படியுங்கள்:
எப்பொழுதும், ஒருவரைச் சந்தித்து, காதலித்து, திருமணம் செய்த பின் தான் அவர் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தக் அமினா ஹார்ட் விசயத்தில் எல்லாமே தலைகீழாக நடைப்பெற்றது எனலாம்.
இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் நாவலிலும் விரைவில் திரைபடமாகவும் வரவுள்ளது. அப்படி என்ன நடந்த்து இவர் வாழ்வில் ? தொடர்ந்து படியுங்கள்:
அமைனா ஏற்கனவே தனகிருந்த குறைபாட்டால் இரண்டு குழந்தைகளையும் அதனாலேயே இரண்டு கணவர்களையும் இழக்க நேரிட்டதால், தான் குழந்தைப் பெற்றுக்கொள்ள செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்தார்.
அவர் விந்து தானம் செய்ய இருந்த விந்து கொடையாளர்கள் மூன்று பேரில் ஸ்காட் தன்னுடைய சுயகுறிப்பில் எழுதியிருந்த தகவல் ” நான் மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறேன்” ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன மற்றும் உள்ளூர் கால்பந்து விளையாட்டு வீர்ர் மற்றும் விவசாயி என்கிறப் குறிப்பு மட்டுமே இருந்தது. எனவே அவரைத் தேர்வு செய்தார். குழந்தை 18 வயது அடையும் முன்னர் தொடர்பு கொள்ள தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்து இருந்தார்.
குழந்தை பிறந்தவுடன் , அவரைப் பற்றிய ஆர்வம் அதிகரித்து, அவரை சந்திக்க எல்லா வழிமுறைகளையும் கையாண்டு, சந்தித்து, அவரது மனதைக் கவர்ந்து, திருமணமும் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் குழந்தையைச் சந்திக்க மறுத்த ஸ்காட், குழந்தை தன்னைபோலவே இருப்பதைப் பார்த்தபின் மனம் மாறி சந்திக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் மூன்றரை வயது மகள் லெய்லா தனது தந்தை அவளை சந்தித்த போது அப்படி நிகழும் என அம்மூவரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த டிசம்பரில், மார்னிங்டன் தீபகற்பத்தில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்தபின் இப்போது, Aminah மற்றும் விவசாயி ஸ்காட் ஆண்டர்சனும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
” எனக்கும் ஸ்காட்கும் நடந்தது ஒரு யதார்த்த சம்பவம். உண்மையில் நாங்கள் சந்தித்த பிறகு, ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்திருந்தது, நாங்கள் காதலித்த விஷயங்கள் எல்லாம் இன்னும் என் மனதில் பசுமையாய் உள்ளன. எங்கள் திருமண நாள் மிகவும் எளிமையாக, தனிமையில் அழகாக இருந்தது,எங்களுக்கிடையில் காதல் வழிந்தோடியது, மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் காதல் கதை ABC யின் ஆஸ்திரேலிய கதையாக இடம்பெற்று, 2014ல் மிகுந்த பரபரப்பாய், உலக தலைப்பு செய்திகளில் ஒன்றாய்த் திகழ்ந்த்து.
இவரது கதையை இப்போது ” நான் எப்படி உன் தகப்பனை சந்தித்தேன்” எனும் நாவலாய் எழுதியிருக்கிறார். ஒரு தயாரிப்பு நிறுவனம் இவரின் கதையை திரைப்படமாக்க உரிமையை வாங்கியியுள்ளது.