மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படம் கேரளாவில் சக்கைப்போடு போடுகிறது. இப்படம் விரைவில் சீன, வியட்நாம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இத்திரைப்படம் தனது வாழ்நாளின் மிகச்சிறந்த படம் என்று மனம் நெகிழ்கிறார் மோகன்லால்.
சுமார் 25 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 400 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் ரிலீசான ஐந்து நாட்களிலேயே ரூ.20 கோடி வசூல் செய்துவிட்டது.
மோகன்லால் நடித்து கடந்த செப்டம்பரில் வெளியான ‘ஒப்பம்’ என்ற திரைப்படம் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதில் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் மோகன்லால்
Patrikai.com official YouTube Channel