மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘மரக்கார்: அரபிகலிண்டே சிம்ஹம்’ திரைப்படம், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பாக ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனாவால், கிணற்றில் போட்ட கல்லாக, முடங்கி கிடக்கிறது.
கேரளாவில் தியேட்டர்கள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடலாம் என தயாரிப்பாளர் நினைத்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு ரம்ஜான் முன் கூட்டியே வருவதால் மலபார் ஏரியாவில் படம் பார்க்க ஆட்கள் வர மாட்டார்கள்.
இதே பிரச்சினை வளைகுடா நாடுகளிலும் உண்டு. மோகன்லால் படம், கேரளாவில் வசூல் குவிப்பது போல் வளைகுடா நாடுகளிலும் ‘நாலு காசு’ வசூல் பார்க்கும்.
ரம்ஜான் முடிந்து வெளியிடாலாம் என்றால் பள்ளிகள் திறப்பு, இதனை தொடர்ந்து மழைக்காலம் என பல்வேறு தடைகள், அரபிக் கடலுக்குள் கோடிகளை முடக்கியுள்ள தயாரிப்பாளர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
– பா. பாரதி