டெல்லி: நூபுர்சர்மா விவகாரத்தை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று, சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலி செய்திகளை கண்டறிந்து, அதன் பின் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் வேலையை செய்வது வருவதாக ’ஆல்ட் நியூஸ்’ நிறுவனம் கூறி வருகிறது. அதுபோல பல செய்திகளின் உண்மைத்தன்மையையும் வெளியிட்டு வந்தது. . இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். இவர் நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சை, உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இந்தியாவை அவமதிக்கும் வகையிலும், சர்ச்சைசை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பதிவிட்ட சர்ச்சைக்குரிய டிவிட் காரணமாக, அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவரது டிவிட் வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, கைது செய்யப் பட்டார். இந்த கைது நடவடிக்கையை அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. அவரை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முகமது ஜுபைர் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்ததாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சைபர் காவல்துறை டிசிபி மல்கோத்ரா கூறுகையில், ‘முகமது ஜீபைர் வங்கி கணக்கிற்கு, கடந்த மூன்று மாதங்களில், ரூ.50 லட்சம் வரை பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. யார் இந்த பணத்தை அனுப்பி உள்ளனர் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சந்தேகத்திற்குரிய அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆல்ட் நியூஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் மக்களிடம் இருந்து பெறும் கூடு நிதி மூலம்தான் இந்நிறுவனம் செயல்படுகிறது. இதனால் இந்நிறுவனத்திற்கு வரும் பணப் பரிமாற்றம் வெளிப்படையாக நடந்துள்ளது. காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்று கூறியுள்ளது.