கொழும்பு:

ஜூன் 9-ம் தேதி பிரதமர் மோடி இலங்கை வர உள்ளதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலை வந்ததும்,  மோடி பிரதமராக பதவி ஏற்கும் முன்பே  உள்ள அடுத்த 6 மாதத்திற்கான வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அறிவித்து இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து.

இந்த நிலையில், ஜூன் 9ந்தேதி மோடி இலங்கை வருவதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்து உள்ளார். ஜூன் முதல் வாரத்தில் மாலத்தீவு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, வரும் வழியில், இலங்கை செல்வதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மோடியின் பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் அதிகாரிகள் குழுவினரும் இந்தியா வந்திருந்தனர்.  அப்போது, மோடி, சிறிசேனா இடையே நடைபெற்ற  சந்திப்பின்போது அமைச்சர் மனோ கணேசன், ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ரவ்ஃப் ஹக்கீம் ஆகியோர் நரேந்திர மோடியிடம் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதை ஏற்றுக்கொண்ட மோடி, வரும் ஜூன் 8ம் தேதி  தனது மாலைதீவு பயணத்தை முடித்து விட்டு,  ஜூன் 9ம் தேதி இலங்கைக்கு வர சம்மதம் தெரிவித்தார் என

பிரதமர் நரேந்திரமோடி விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறி உள்ளார்.