டில்லி
இந்த ஆண்டுக்கான கடைசி ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், “எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக உள்ளது. நான் இந்நிகழ்வின் மூலம் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அவர்களின் குரல் இதில் ஒலிக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இளஞர்களுக்கு இந்த புத்தாண்டு இன்றியமையாததாக அமையும். நாளை வரும் புத்தாண்டு மிகச் சிறந்த நாளாகும். 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் இனி 18 வயதாகப் போகிறது. அதை ஒட்டி அவர்களும் ஜனநாயகத்தை காப்பாற்றக் கூடிய வாக்காளர்களாக உருவெடுப்பார்கள்.
வாக்காளர்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுடைய வாக்குகள் தான் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகிறது. அதனால் நீங்கள் அனைவரும் ஜாதி, மதம், பயங்கரவாதம், ஊழல் மற்றும் வறுமையை ஒழிக்க பாடுபட்டு புதிய இந்தியாவை உருவாக்கப் பாடு பட வேண்டும். மாவட்ட வாரியாக இளைஞர்கள் நாடாளுமன்றங்களை நடத்திப் பழக வேண்டும். அதனால் நீங்கள் ஜனநாயகத்தின் குரலை உணர முடியும். உங்கள் வாக்கினால் நீங்கள் புரட்சியை ஏற்படுத்தலாம்” எனக் கூறி உள்ளார்.