க்னோ

த்தரப்பிரதேச பாஜக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

 

பாஜகவில் ஒரே தலைவராக பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தப் படுவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.    அனைத்து மாநில பாஜக அலுவலக சமுக வலைத் தள பக்கங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறுவதும் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் படம் இடம்பெறுவதும் வழக்கமாகும்.

ஆனால் உத்தரப் பிரதேச பாஜகவின் டிவிட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டா ஆகிய இருவரின் புகைப்படங்களும் அகற்றப்பட்டுள்ளன.   இது சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பக்கத்திலோ அல்லது பாஜக தலைவர்களோ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.