டெல்லி: 3வது முறை பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடியின் முதல் கையெழுத்து, விவசாயிகளின் நலனுக்காக போடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்தான் பிரதமர்  மோடி தனது முதல் கையெழுத்தை இன்று போட்டுள்ளார்.

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வாகியிருக்கும் மோடி,  விவசாயிகளின் பலன் பெறும் வகையில் தனது முதல் கையெழுத்தை இன்று போட்டுள்ளார். விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.

இன்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு அலுவலக வாயிலில் இன்று அதிகாரிகள் கைதட்டி வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தனது அலுவலத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கோப்புகளை ஆராய்ந்தார்.

தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில்  முதல் கையெழுத்தை போட்டுள்ளார். இதுபற்றி கூறிய பிரதமர் மோடி, தனது முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கானது என்றும், விவசாயிகளின்  நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுவதாக தெரிவித்தார்,   வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்க இருப்பதாகவும் கூறினார்.