
டில்லி
இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார்.

கடந்த 17ஆம் தேதி முதல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை பிரதமர் வரவேற்கவில்லை என சர்ச்சை எழுந்தது.

மேலும் அவர் மனைவி காலிஸ்தான் ஆதரவாளருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சை மேலும் பலப் பட்டது. இந்தியாவில் அம்ருதசரஸ் உட்பட பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்த ட்ரூடோ நேற்று மீண்டும் டில்லி வந்து சேர்ந்தார்.

அவரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்று சர்ச்சைகளை முடித்து வைத்துள்ளார். அத்துடன் இன்று பிரதமருடன் பேச்சு வார்த்தைகளலி ட்ரூடோ நடத்துகிறார். இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், “கனடா பிரதமர் ஜஸ்டினை சந்தித்து பேசுவதில் மிகவும் ஆர்வமகா உள்ளேன். இந்த இரு நாடுகளுக்கிடையில் உள்ள உறவுக்கு அவர் காட்டும் ஆழமான அர்ப்பணிப்பை நான் உளமாற பாராட்டுகிறேன்” என பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]