டெல்லி:  இந்தியாவில் உருமாற்ற அடைந்த கொரோனா பரவல் உச்சமடையும் என்று எங்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி புறந்தள்ளினார் என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பாக மத்திய அரசை எச்சரித்தோம், ஆனால் அதை செவிமடுக்க மோடி அரசு தவறிவிட்டது, அதனால்தான் இவ்வளவு பேரிழப்பு என்று  என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு மூனறை லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்பும் 3500ஐ தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பும் 2 கோடியை கடந்துள்ளது.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது,

உருமாறி வரும் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்தியஅரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தோம். மத்தய சுகாதாரத்துறை செயலாளரிடமும் தெரிவித்தோம்.  ஆனால், அதை மோடி அரசு கண்டுகொள்ள மறுத்துவிட்டது. இதனால், தற்போது நாம் பேரழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

எங்கள் தெரிவித்த எச்சரிக்கை தகவல்  பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்று கூறுவதை  நம்ப முடியவில்லை என்று தெரிவித்தவர்,  அதிகப்படியான தொற்று பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். இதுதொடர்பான பல செய்திகள் உலக நாடுகளில் வெளியானது. ஆனால், நமது நாட்டு ஊடகங்கள் அதை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா 2வதுஅலை வீரியமாக பரவும் என பல முறை மத்தியஅரசிடம் எச்சரிக்கை விடுத்ததாக பல்வேறு சுகாதாரத்துறை  மற்றும் மருத்துவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.   ஆனால், பிரதமர் மோடியின் அரசு, அதை புறக்கணித்ததே, தற்போதைய கடுமையான பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என குற்றம் சாட்டி வருகின்றனர்.