புதுடெல்லி:
ப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி கொரோனா திருவிழாவை நடத்தலாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, ‘அனைத்து சவால்களும் இருந்த போதிலும் முன்பைவிட சிறந்த அனுபவமும், வளமும் நம்மிடம் உள்ளன. 70 சதவீதம் ஆர்.டி-பிசிஆர் பரிசோதனை என்பது இலக்காக இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு என்பது சிறந்த வழியாக இருக்கும்.

நோயாளிகள் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும். இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 5 அல்லது 6 மணி வரை அமல்படுத்துவது நல்லது. ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தொடர் எச்சரிக்கைக்கு ஏற்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தைய பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.