புதுடெல்லி:
பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இன்று தனி விமானத்தில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி முதலில் வியட்நாம் செல்கிறார். அதைடுத்து சீனா செல்கிறார். 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை இன்று(செப்.,2) மேற்கொள்கிறார். முதலில், வியட்நாம் செல்லும் அவர், அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது உள்ளிட்டவை பேச்சுவார்த்தையில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு வியட்நாம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா பயணம்
நாளை சீனாவின் ஹேங்சூ நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு 4 மற்றும் 5ம் தேதிகளில், நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
‘பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, வரும் 5ம் தேதி இந்தியா திரும்புகிறார்.