சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது பிரதமரின் தமிழக பயணம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

சமீப காலமாக அதிமுக அரசுக்கு எதிராக பாஜகவை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்றைய சந்திப்பு பரபரப்பை   ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முதல்வரிடம், கண் அறுவை சிகிச்சை குறித்து நலம் விசாரித்ததாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களின் ஓபிஎஸ் பேசிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், மற்ற கட்சி விவகாரங்களில் பிரதமர் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

தான் முதல்வரை சந்தித்து பேசியது,  துறைமுக திட்டம் குறித்துதான் என்றும்,  மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும்” என்ற அவர், பிரதமரின் தமிழக வருகை குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பயங்கரவாதம் குறித்த ஓ.பி.எஸ்.சின் மறுப்பை ஏற்க முடியாது என்ற அவர், ஓபிஎஸ் பெரிய ஜமுக்காளத்தை வைத்துக்கொண்டு பேசுவதாக நக்கலடித்தார்.

தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து தமிழக பா.ஜ.க. முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.