மோடி குடும்பப்பெயர் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்.

2019 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்பளித்ததைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் தண்டனைக்கு தடை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.