நாளை முதல் சுவீடன், பிரிட்டனில் மோடி 5 நாள் சுற்றுப் பயணம்

டில்லி:

பிரதமர் நரேந்திர மோடி நாளை (16-ம் தேதி) முதல் சுவீடன், பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் 17ம் தேதி நடைபெறும் ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர்.

அங்கிருந்து 17-ம் தேதி மாலை பிரிட்டன் செல்லும் மோடி லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்தகொள்கிறார். 18-ம் தேதி பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை சந்தித்து பேசுகிறார். லண்டன் டவுன் ஹாலில் பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே சிறப்புரையாற்றுகிறார். இந்தியா திரும்பும் வழியில் ஏப்ரல் 20-ம் தேதி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்-ஐ சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: britain from tomorrow, modi starts 5 day tour to sweeden, நாளை முதல் சுவீடன், பிரிட்டனில் மோடி 5 நாள் சுற்றுப் பயணம்
-=-