டில்லி

ந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன் வந்துள்ள அமேசான் அதிபரைக் காணப் பிரதமர் மோடி மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் புகழ்பெற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தற்போது முதல் இடங்களில் இருந்து வருகிறது.   இந்த நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பெசோஸ் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்து நேற்று அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றார்.    அவர் தனது பயணத்தின் போது இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் அதாவது ரூ.7100 கோடி முதலீடு செய்ய உள்ளதாக  அறிவித்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டில்லியில் நடந்து வந்த ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “அவர்கள் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யலாம்.   ஆனால் அவர்களுக்கு அது இழப்பீடாக ஆனால் அதை நாம் ஈடு செய்ய வேண்டும்.  எனவே அவர்கள் நமக்கு உதவி செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கத் தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது.   அந்நிறுவனம் சமீபத்தில் அளவுக்கு மீறி விலைக் குறைப்பு விற்பனை செய்ததால் இந்திய விற்பனைச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரையொட்டி இந்த விசாரணை நடந்து வருகிறது.  இதைப் போல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்தியா வந்துள்ள ஜெஃப் பெசோஸ் தனது பயணத்தின் ஒரு  பகுதியாக இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்பி சந்திக்க நேரம் கேட்டதாகவும் அவர் நேரம் அளிக்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.    இதற்கு ஜெஃப் நடத்தும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் மோடி அரசை விமர்சித்து வரும் கருத்துக்களும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.    காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் முடிவுகளை இந்த பத்திரிகை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.