பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையெட்டி, அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இன்று ஒரே நாளில் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

இந்த மாதம் 8ந்தேதி வரை கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்கு நேரம் ஒதுக்கியுள்ள மோடி, ஏற்கனவே கடந்த 1ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். நேற்று டில்லியில் நடைபெற்ற இருந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றதால், இன்று மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று காலை கர்நாடகம் வந்துள்ள மோடி,  11 மணிக்கு  கலபுரகியிலும், மதியம் 3 மணிக்கு பல்லாரியிலும், மாலை 6 மணிக்கு பெங்களூரு கெங்கேரி அருகிலும் நடைபெறும் பா.ஜ., பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

அதேவேளையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று கர்நாடகம் வருகிறார். அவர் முற்பகல் 11 மணி அளவில் பீதர் வந்து,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவுரத் நகருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து பால்கி, உம்னாபாத் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் பஸ்சில் பீதர் செல்லும் ராகுல்,அங்கு நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இரு ஒரே நாளில் இரு பெரும் தலைவர்கள் கர்நாடகாவில் போட்டி பிரசாரங்கள் மேற்கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.