டில்லி

ரும் செவ்வாய் கிழமை அன்று தேசிய ஊரடங்கு முடிவடைவதால் விரைவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது.  ஆயினும் கொரோனா பரவுவது முழுவதுமாக குறையவில்லை.  இந்தியப் பொருளாதாரம் இதனால் மேலும் சரியலாம் எனவும் பலர் தெரிவிக்கின்றனர்.  இதற்காக மத்திய மாநில அரசுகள் பல நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

கொரோனா பரவுதல் தற்போது சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.  எனவே மருத்துவர்கள் குழு கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றன.  நேற்று முன் தினம் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மோடி கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டியது உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

ஆகவே இந்த 21 நாட்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது இந்த ஊரடங்கு விதிகள் மேலும் கடுமையாக்கப் பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  பல மாநில முதல்வர்கள் இந்த 21 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே வரும் செவ்வாய்க்கிழமை தேசிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அதை நீட்டிப்பது அல்லது ரத்து செய்வது என எந்த முடிவு எடுத்திருந்தாலும் அதற்கு இடையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது.