கொல்கத்தா: பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது போனும் ஒட்டுக்கேட்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா, நீதித்துறைதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று உரையாற்றினார். அப்போது,  நாட்டு மக்களுக்கும், மே.வங்க மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் பணம், விசாரணை அமைப்புகள், மாபியாக்களின் அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்து போராடினோம். அனைத்து தடைகளையும் தாண்டி, மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டதால், நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். நமது நாடு மற்றும் உலக நாட்டு மக்களின் ஆசிகளை பெற்றுள்ளோம்.

ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம்தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது இந்த விவகாரத்தால் சரத் பவார், டில்லி முதலமைச்சர், கோவா முதலமைச்சர் ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் செல்லிடப்பேசியில் பொருத்தியுள்ளார்கள். நான் யாரிடமும் பேசவில்லை. மோடிஜி இது தனிப்பட்டது அல்ல, உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை.

மத்திய அரசை அடக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை அழித்து விடுவார்கள். கூட்டாட்சி கட்டமைப்பை பா.ஜ., தரைமட்டமாக்கி உள்ளது. இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளன.பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

“மூன்று விஷயங்கள் ஜனநாயகத்தை உருவாக்குகின்றன – ஊடகங்கள், நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் – மற்றும் பெகாசஸ் இந்த மூன்றையும் மோடி அரசு கைப்பற்றியுள்ளன”, மோடிஜி இது தனிப்பட்ட விஷயமல்ல என்று விமர்சித்தவர்,  நீதித்துறையால் மட்டுமே நாட்டை காக்க முடியும். ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் செல்லிடப்பேசியும் வேவு பார்க்கப்பட்டு உள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு ஆவேசமாக கூறினார்.