திருவனந்தபுரம்

பிரதமர் மோடி நாளை ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை இடுகிறார்.

ஓகிப் புயலால் தமிழகத்தின் குமரி மாவட்டம், கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   இதில் குமரி மாவட்டமும் கேரள கடற்கரைப் பகுதிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின.   இந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.   ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர்.   லட்சத்தீவிலும் கடற்கரைப் பகுதிகள் சிதைந்து போய் உள்ளன.

தற்போது பிரதமர் மோடி வரும் செவ்வாய்க்கிழமை புயல் தாக்கிய பகுதிகளைப் பார்வையிட நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.   அவர் குமரி மாவட்டம்,  கேரள கடற்கரைப் பகுதிகள் மற்றும் லட்சத்திவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும்,  பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.