டில்லி

த்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா அரசு அதிகாரிகளை பேட்டால் அடித்து விரட்டியதற்கு  பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில இந்தூர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.  இவரது தந்தை கைலாஷ் விஜய்வர்கியா பாஜகவின் மூத்த தலைவர் ஆவார்.   கடந்த வாரம் இவர் தொகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் வந்துள்ளனர்.   அப்போது அவர்களுக்கும் ஆகாஷுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

ஆகாஷ் திடீரென அந்த அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து அங்கிருந்து விரட்டி உள்ளார்.   இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது.  ஆனால் இது குறித்து ஆகாஷ் மற்றும் அவர் தந்தை கைலாஷ் ஆகியோர் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

கைலாஷ் தனது மகன் இவ்வாறு அடித்ததற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.   மாறாக அவரை ஒரு புதிய கிரிக்கெட் வீரர் எனவும் எங்கு பேட்டிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை எனவும் கூறி உள்ளார்.   ஆகாஷ் வருத்தம் தெரிவிக்காமல் தாம் செய்தது சரி எனவும் மீண்டும் பேட்டிங் செய்ய கடவுள் வாய்ப்பளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அறிந்த பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து பாஜக தலைவர் ராஜிவ் பிரதாப், “பிரதமர் இந்த நிகழ்வால் மிகவும் கோபம் கொண்டுள்ளார்.  கட்சியின் பெயரால் பொது இடங்களில் வன்முறை செய்வதற்கும் தவறாக நடந்துக் கொள்ளவும் யாருக்கும் உரிமை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மால் இது போன்ற நிகழ்வுகளை ஒப்புக் கொள்ள முடியாது எனவும் பிரதமர் கூறி உள்ளார்.  ஆகாஷை விரைவில் கட்சி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் யாருடைய மகனாக இருந்தாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறிய மோடி ஆகாஷ் ஜாமினில் வந்த போது வரவேற்ற அவர் ஆதரவாளர்களையும் கட்சி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.