டில்லி
கர்நாடகா மாநில தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்புக்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிய வந்துள்ளது. இதனால் பெரும்பான்மை இடங்களைப் பெற இரு கட்சிகளும் தீவிர பரப்புரைகளை நிகழ்த்தி வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் குறித்து இன்று பாஜக வேட்பாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மொபைல் செயலி மூலம் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
இது குறித்து பாஜக நிர்வாகிகளில் ஒருவர், “வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசார உத்திகள் குறித்து மோடி ஆலோசனை வழங்க உள்ளர். பாஜகவின் சாதனைகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது எவ்வாறு எவ்வாறு என்பதும் விளக்கப்பட உள்ளது.
வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் கர்நாடாகவில் தேர்தல் பரப்புரையை மோடி தொடங்குகிறார். அவர் சுமார் 15 முதல் 20 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். மேலும் பல மக்கள் சந்திப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.