
ஐதராபாத்
பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை இன்று துவக்கி வைத்தார்.
ஐதராபாத் மெட்ரோவில் முதல் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 72 கிமீ தூரத்துக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 30 கிமீ தூரத்துக்கு இன்று சேவை துவங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள மியாபூர் ரெயில் நிலையத்தில் நடந்த துவக்கி விழாவில் இன்று மதியம் 2.25 மணிக்கு பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் சேவையை துவங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அதிகாரிகளுடன் ஐந்து கீமீ தூரம் உள்ள கூகட் பள்ளி ரெயில் நிலையம் வரை மோடி பயணம் செய்தார். இந்த ரெயிலை ஒரு பெண் ஊழியர் இயக்கி உள்ளார்.
நாளை முதல் பொதுமக்களின் சேவையை மெட்ரோ ரெயில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel