டில்லி:

சிபிஐ இயக்குராக இருந்த அலோக் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக காலியாக உள்ள சிபிஐ இயக்குனர் பதவிக்கான தேர்வு கமிட்டி குழு கூட்டம் வரும் 24ந்தேதி (வியாழக்கிழமை) கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக குழுவின் பிரதிநிதிகளாக  பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் உள்ளனர். இந்த 3 பேர் கமிட்டி சிபிஐ இயக்குனர் தேர்வு குறித்து ஆலோசித்து முடிவை அறிவிக்கும்.

ஏற்கனவே சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட ஊழல் தொடர்பான மோதலை தொடர்ந்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பட்ட நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து தேர்வு குழு கூடி முடிவு செய்ய அறிவுறுத்தியது. அப்போது தேர்வு குழு கூடியபோது, ரஞ்சன் கோகாய்க்கு பதில் நீதிபதி  நீதிபதி  ஏ கே சிக்ரி  கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை இடமாற்றம் செய்து மத்திய தேர்வு குழு கமிட்டி உத்தரவிட்டது.

இதன் காரணமாக, தனது பதவியை அலோக் வர்மா ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்வுக்குழு கூடி புதிய இயக்குனரைஅறிவிக்க உள்ளது.‘

சிபிஐ இயக்குனர் பொறுப்புக்கு ஜே.கே. சர்மா மற்றும் பரமிந்தர் ராய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட வருவதாகவும், இவர்களின் பின்புலம் மற்றும் அவர்கள் கையாண்ட வழக்குகள், அவர்கள் வகித்த பதவிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை சிபிஐ இயக்குனர் தேர்வு கமிட்டி கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதைத்தொடர்ந்து புதிய சிபிஐ இயக்குனர் யார் என்பது தெரிய வரும்.

[youtube-feed feed=1]