டெல்லி: இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில், பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 3வது கட்ட தேர்தல், மே 7ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வடமாநிலங்களில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் போராடி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அதீத முயற்சிகளை எடத்து வருகிறது. தேர்தல் காரணமாக, பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் என பல தரப்பினரும் அதிரடி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு இருக்காது என்று பேசியிருந்தார், மேலும் மதரீதியிலான இடஒதுக்கீடு கொண்டு வரமாட்டாம் என உறுதி தருமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை, மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்றார்.
உண்மை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்பு அல்லது வாக்குறுதி எதுவும் இல்லை. இந்தியக் கூட்டணியில் எந்தக் கட்சியும் இல்லை. மோடி நீண்ட காலம் வாழட்டும்!
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றார். மோடி வரலாற்றை மறந்துவிட்டார். தேர்தல் பரப்புரைகளில் இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பேசி உளறி வருகிறார். அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை.
SC மற்றும் ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் ஓபிசிக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நரசிம்மராவ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது.
இந்த வரலாறு அவருக்கு தெரியவில்லை. 2014 முதல் பாஜக அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது” என்று விமர்சித்துள்ளார்.