புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4% என்பதிலிருந்து 3.5% என்பதாக குறைக்கப்படுகிறது. பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1% என்பதிலிருந்து இருந்து 6.4% என்பதாக குறைக்கப்படுகிறது.
மேலும், ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5% என்பதிலிருந்து 4.4% என்பதாக குறைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% என்பதிலிருந்து 6.5% என்பதாக குறைக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.