சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத செயலால் நாடு முழுவமும் மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு இடியை இறக்க உள்ளது.

ஜிஎஸ்டியின் குறைந்த பட்ச வரியான 5 சதவிகிதத்தை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பல பொருட்கள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல மாநிலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

1991ம் ஆண்டு பிறகு 2014ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சி அமைத்த பாஜகவும், பிரதமராக பதவி ஏற்ற மோடியும், இந்தியாவை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்துவார்கள், மக்களின் வாழ்வாதாரம் உயரும் என  எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு என ஐந்தாண்டுகளுக்கு 10 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்குவோம் என பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி மோடி,  மக்களின் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், முதன்முதலாக பணமதிப்பு கொண்டு வந்து சாமானிய மக்களையும் சாகடித்து நடுத்தெருவுக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அறிமுகம், வங்கிகள் டிஜிட்டல் மயம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, பிஎஸ்என்எல் உள்பட பல நிறுவங்களின் சொத்துக்கள் விற்பனை கடந்த 7 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணியின் திறமையற்ற ஆட்சியால், கடந்த 201;ம ஆண்டு டிசம்பர் முதல் ஜூன் 2020 வரையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2020-21 நிதியாண்டின் ஜிடிபி அளவிடு -7.3 சதவீதமாகக இருந்தது.  இது கடந்த 40 வருட சரிவு என்று விமர்சிக்கப்பட்டது.  மோடி அரசின் மோசமான ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவையே நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பேரிழப்பும் மோடி அரசின் தோல்வியை பறைசாற்றியது.

இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றின் வாயிலாகத் தேசிய அளவிலான வறுமைக் கோட்டிற்குக் கீழ் சுமார் 23 கோடி மக்கள் தள்ளப்பட்டு உள்ளதாக CMIE-CPHS தரவுகள்  தெரிவிக்கின்றன. மோடியின் கடந்த 7 வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப் படுத்தும் அனைத்து அதாவது “fundamentals of the economy” மோசமாகவே உள்ளது என்றும் ஆய்வுகள் தெரித்துள்ளன.

தற்போது நடைமுறையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5, 12, 18, 28 ஆகிய 5 நிலைகளாக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், குறைந்த பட்ச ஜிஎஸ்டி வரியான 5 சதவிகித்தை மேலும் 3 சதவிகிதம் கூட்டி 8%ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது   சரக்கு மற்றும் சேவை வரியில் குறைந்தபட்சமாக  இருக்கும் 5சதவீதத்தை 8 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டிகவுன்சில் குழுக் கூட்டத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி அடுத்தக்கட்டமாக தற்போது 12 சதவீத வரிவிதிப்பில் இருப்பவை அனைத்தும் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோல 12 சதவிகித வரியை 16 சதவிகிதமாக உயர்த்த மத்தியஅரசு திட்டமிட்டபோது, தமிழகம் உள்பட மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தால், அதை கிடப்பில் போட்டது. இந்த நிலையில், தற்போது, 5 சதவிகித வரியை 8 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

5சதவிகித ஜிஎஸ்டி வரிக்குள் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களான சர்க்கரை, மளிகைப்பொருட்கள், சமையல் எண்மெய், காபி, நிலக்கரி, உயிர் காக்கும் மருந்துகள், இனிப்புகள் ஆகியவை அடங்குகின்றன. இதற்கான வரியை மத்தியஅரசு உயர்த்தினால், அது சமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் நிலை உருவாகிவிடும்.

ஆனால், மத்திய அரசோ சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கவனித்துக்கொள்ளாமல், வரிகளை உயர்த்தி, அதில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு ஆட்சியை நடத்தவே விரும்புவது தெரிகிறது. இந்த வரி உயர்வு மூலம் கிடைக்கும் வருவாய் காரணமாக,  மாநில அரசுகள் மத்திய அரசை நிதிக்காக அதிகமாக சார்ந்தி ருப்பது குறையும் என்று நம்புகிறது.

இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான நிதியமைச்சக்ம், இ்ந்தமாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தில் 5 சதவீத வரியை 8% உயர்த்த அப்போது முடிவு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரி உயர்வு மூலம், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு  ரூ.1.50 லட்சம் கோடி கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சம்பவம் நடந்தேறியதும் மோடி ஆட்சியில்தான் என்பதை மறந்து விட முடியாது. இந்த நிலையில் தற்போது மேலும் ஜிஎஸ்டி வரியை உயர்த்த முனைப்பு காட்டி வருவது, பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சி; ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்து வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு போன்றவற்றால் ஏற்கனவே கொதித்து போயுள்ள ஏழை நடுத்தர மக்கள் மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது.  மக்களை வாட்டி வதைத்து வரும்  மக்கள் விரோத ஆட்சி என்றே என்றே மோடி ஆட்சியை விமர்சித்து வருகின்றனர். இது சூழலில்,

அரசுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மேலும் மேலும் சாமானிய மக்களின் தலையில் சுமையை ஏற்ற மோடி அரசு முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆட்சியாளர்களே கொஞ்சம் மக்கள் குறித்து சிந்தியுங்கள்.! இல்லையேல் விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்…