டில்லி:

நாட்டில் பிரவினைவாதத்தை தூண்டீ வரும், யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற  உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான  உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, யாசின் மாலிக் இயக்கத்துக்கு பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்து உள்ளது.

யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாசின் மாலிக் மீது, முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.