
பனாரஸ்: உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஏப்ரல் 26ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 25ம் தேதி, தனது தொகுதியில், லங்கா மற்றும் தஷாஷ்வமேத் ஆகிய இடங்களுக்கு இடையே, 10 கி.மீ. தூரம் பிரச்சார ஊர்வலம் செல்லவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 26ம் தேதியன்று, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அப்போது, மோடியுடன், அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மனோஜ் சின்ஹா மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி
Patrikai.com official YouTube Channel