சிம்லா,

மாச்சல பிரதேச சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற பாஜக இன்று பதவி ஏற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அத்வானி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழா முடிந்ததும் டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி சிம்லா நகரின் வீதியில் உள்ள இந்திய காபி கடையில் டீ குடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த பொதுமக்கள் அங்கு கூடி, பிரதமருன் மோடி எடுத்தனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இமாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்தது. மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் பதவி ஏற்றார். இந்த விழாவுக்கு பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் வந்திருந்தனர்.

பதவியேற்பு விழா முடிந்ததும், டெல்லி செல்வதற்காக சிம்லா நகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை நோக்கி பிரதமரின் கார் சென்றது. அங்குள்ள மால் சாலை வழியாக சென்றபோது சாலையின் ஓரமுள்ள இந்தியன் காபி ஹவுஸ் அருகே காரை நிறுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மோடி  பிரதமராவதற்கு முன்பு கட்சி பணிகள் தொடர்பாக சிம்லா நகருக்கு வந்தபோது அந்த காபி கடையில் டீ குடித்துக்கொண்டி நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமாம். அதை நினைவுகூர்ந்து, அந்த கடையில் இருந்து  காபி வரவழைத்து சாலையில் நின்றபடி அருந்தினார்.

இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பலர் பாதுகாவலர்களையும் மீறி பிரதமர் செல்பி எடுத்துக்கொண்டனர். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.