டெல்லி: பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏ320 ரக பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன், கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந் நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.
விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.