டில்லி

பிரதமர் மோடி பிரசாரத்துக்கு 800 தினங்கள் வந்துள்ள நிலையில் பாராளுமன்றத்துக்கு 80 நாள் கூட வரவில்லை என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.   கடந்த 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி அமைத்த எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறவில்லை.   அந்த பெருமையை அடைந்த ஒரே கட்சி பாஜக மட்டுமே ஆகும்.   அத்துடன் மோடி பிரதமராக பதவி ஏற்கும் போது  உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது.

மோடி, “நாங்கள் இந்த பாராளுமன்றம் என்னும் மக்களாட்சி கோவிலில் உள்ளோம்.  நாங்கள் தூய்மையாக பணி ஆற்றுவோம். அது மட்டுமின்றி அரசு எங்களுடைய நடவடிக்கைகளை ஆராய்ந்து  இந்த ஆட்சி முடிவில் அதாவது 2019 ஆம் வருடம் எங்கள் நடவடிக்கை குறித்த அறிக்கையை அளிக்கும்” என தெரிவித்தார்.

அதே வேளையில் மோடி அரசு மக்களாட்சியின் கோவில் என சொல்லப்படும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு வந்தது.   எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படவில்லை.  சமீபத்தில் அளிக்கப்பட்ட இடைநிலை நிதி அறிக்கையும் விவாதம் இல்லாமல் ஒப்புதல் பெற்றதாக முடிவு செய்யப்பட்டது.

அது மட்டுமின்றி மக்களவையில் கொண்டு வரப்பட்ட  நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கூட அனுமதிக்கப்படவில்லை.     அப்போது குளிர்கால தொடர் கூட்டம் மூன்று வாரங்களுக்கு மேல் நடந்தது.  ஆயினும் இது குறித்து  ஆளும் கட்சியினரின் கருத்தைக் கூட சபாநாயகர் கேட்கவில்லை.

மாநிலங்களவையின் ஒப்புதல் பெற வேண்டிய மசோதாக்கள் அங்கு தாக்கல் செய்யப்படாததும் அங்கு தாக்கல் செய்யபட தேவையற்ற மசோதாக்கள் தக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றதும் இந்த ஆட்சியில் நடந்துள்ளன.    இவற்றில் ஆதார் சட்டம் முக்கியமானதாகும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைவருக்கும் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மேல் வகுப்பினருக்கு மட்டுமே பயன்படும் என கூறப்பட்டது.   அதனால் பாஜக அரசு எதிர்ப்புக்கு அதை நாடாளுமன்ற கூட்டத்தின் பனிக் கால தொடரின் இறுதி நாள் அன்று தாக்கல் செய்தது.     மேலும் அந்த மசோதாவை சரியாக படித்து பார்த்து விவாதம் செய்ய உறுப்பினர்களுக்கு நேரம் அளிக்கவில்லை.

இதை போல பல நிகழ்வுகள் உள்ளன.   அதனால் அரசு நடவடிக்கை குறித்த அறிக்கைகள் மோடியின் வாக்குறுதிப்படி வெளியாகவில்லை என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் வருகை பதிவேட்டின்படி பிரதமர் மோடி பிரசாரக் கூட்டங்களுக்கு 800 நாட்களுக்கு மேல் வருகை அளித்துள்ளதகவும் பாராளுமன்ற கூட்டங்களுக்கு 80 நாட்கள் கூட  வருகை தரவில்லை எனவும் ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

 

Thanx : THE NATIONAL HERALD